Close
அக்டோபர் 12, 2026 9:35 மணி

நாமக்கல் வேலை வாய்ப்பு மையத்தில் குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி

டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வரும் 15ம் தேதி துவங்குகிறது.இது குறித்து கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.

டிஎன்பிஎஸ்சி நடத்தும், 6,574 காலிப்பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க வரும் நவ. 5ம் தேதி கடைசி நாள். இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி, நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வரும் 15ம் தேதி காலை 10 மணிக்கு துவக்கப்பட உள்ளது.

தன்னார்வ பயிலும் வட்டத்தில் 2025-26லம் பயின்ற மாணவர்கள், வெளியான தேர்வு முடிவுகளில் குரூப் 4 தேர்வில் 17 பேரும், குரூப்2, 2ஏ தேர்வில் 15 பேரும், காவல்துறை’ சீருடைப்பணியாõளர் தேர்வில் 19 பேரும், பிஜி டிஆர்பி தேர்வில் 2 பேரும், கூட்டுறவு பணியாளர்கள் தேர்வில் 23 பேரும், ஹெல்த் இன்ஸ்பெக்டர் தேர்வில் 12 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி மூலமோ, onlineclassnkl@gmail.com என்ற இமெயில் மூலமோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரில் தொடர்பு கொண்டோ தங்களது பெயர், விபரங்களை பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top