Close
அக்டோபர் 13, 2026 9:50 மணி

கூலியை உயர்த்தி வழங்கக்கோரி டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் குடோனில் இருந்து மதுபான கடைகளுக்கு லாரிகளில் மதுபான பெட்டிகளை ஏற்ற பெட்டிக்கு ரூ. 5 கூலி வழங்க வலியுறுத்தி, நாமக்கல் டாஸ்மாக் குடோன் முன்பு டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்க பொருளாளர் செந்தில் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் வேலுசாமி கோரிக்கைளை விளக்கி பேசினார். மதுபான பெட்டிகளை லாரிகளில் ஏற்ற ஒரு பெட்டிக்கு ரூ. 5 வீதம் கூலி வழங்க வேண்டும். குடோன் தொழிலாளர்கள் பணிபுரியும் போது லோடு ஏற்றும் பகுதியில் மேற்கூரை அமைக்க வேண்டும்.

குடிநீர், கழிப்பறை வசதி மேற்கொள்ள வேண்டும். சரக்கு ஏற்றும் போது உடையும் மதுபாட்டில்களுக்கு தொழிலாளர்கள் பணம் கட்ட வேண்டும் முறையை ரத்துசெய்ய வேண்டும். தீபாவளி போனஸ் பண்டிக்கைக்கு 10 நாட்கள் முன்னதாக வழங்கவேண்டும்.

ஸ்கேன் செய்து பெட்டிகளை இறக்கும் முறைக்கு கூலியை உயர்த்தி தரவேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் ரமேஷ், செல்வம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர்  கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top