Close
செப்டம்பர் 26, 2026 6:45 மணி

நாமக்கல் மாநகராட்சியில் தூய்மையே சேவை சுவரில் விழிப்புணர்வு படங்கள் வரைந்த மாணவிகள்

தூய்மையே சேவை தலைப்பில் கடந்த 17ம் தேதி முதல், ஒரு மாதம் கூட்டு தூய்மை பணியில், பொது இடங்களான கோயில், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களை தூய்மை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

குப்பை கொட்டாமல் தடுக்க அந்த பகுதிகளை அழகு படுத்துதல், பள்ளி மாணவ மாணவிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. காய்கறி குப்பைகளை உரமாக்கி வீட்டு செடிகளுக்கு பயன்படுத்துவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது.

மேலும் பொது கழிப்பிடம், சமுதாய கழிப்பிடங்களை தூய்மையாக வைத்து கொள்வது குறித்து விழிப்புணர்வு, சுவர்களில் விழிப்புணர்வு படங்களை வரைவது உள்ளிட்ட பணிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையொட்டி, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சுவரில் குப்பைகளை 4 வகைககளாக தரம் பிரித்து வழங்குவது மற்றும் தூய்மை இந்தியா குறித்து விளக்கும் படங்களை பள்ளி மாணவிகளைக் கொண்டு வரையப்பட்டன.

இதனை மாநகராட்சி ஆணையர்செல்வ பாலாஜி பார்வையிட்டார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி, துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் நந்தினி, ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top