Close
அக்டோபர் 10, 2026 6:38 மணி

திருவேடகம் வைகை ஆற்றில் தண்ணீர் இல்லாத நிலையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் மன வேதனை

சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் ஒவ்வொரு வருடமும் சித்திரை அமாவாசை ஆடி அமாவாசை புரட்டாசி அமாவாசை தை அமாவாசை ஆகிய தினங்களில் பொதுமக்கள் தங்களின் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்

இதேபோல் புரட்டாசி மாதம் வரும் மகளாய அமாவாசையான இன்று சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றிற்கு மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை 4 மணி முதல் ஏராளமான பொது மக்கள் வைகை நதிக்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு செல்வதற்கு வருகை தந்தனர்

கடந்த காலங்களில் வைகையில் தண்ணீர் சென்ற நிலையில் தர்ப்பணம் கொடுப்பதில் பொதுமக்களுக்கு எந்த ஒரு சிரமமும் ஏற்படவில்லை. ஆனால் கடந்த சில மாதங்களாக வைகையில் தண்ணீர் இல்லாத நிலையில் வறண்டு காணப்படுகிறது. இதனால் தர்ப்பணம் கொடுப்பவர்கள் எள், அரிசி போன்றவற்றை வைகை ஆற்றில் மணலில் வைத்து விட்டு சென்று விடுகின்றனர்.

இதன் காரணமாக தங்களின் வழிபாடு நிறைவேறுமா என்ற ஐயம் ஏற்பட்டு மனவேதனையுடன் செல்வதாக கூறுகின்றனர். திருவேடகம் ஊராட்சி சார்பில் எந்த ஒரு முன்னேற்பாடு பணிகளும் செய்யாத நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே வைகை ஆற்றில் குவிந்த நிலையில் அவர்களுக்கான தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படாத நிலையில் வெளியூரிலிருந்து வந்த பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

ஏற்கனவே கடந்த ஆடி அம்மாவாசை அன்று இதே போன்று வைகையில் தண்ணீர் இல்லாத நிலையில் பக்தர்கள் மன வேதனையுடன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சென்றனர். தற்போதும் அதே நிலை நீடித்து வரும் நிலையில் ஊராட்சி சார்பில் எந்த ஒரு முன்னேற்பாடு பணிகளையும் அடிப்படைய வசதிகளையும் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

ஆகையால் இனி வரும் காலங்களிலாவது இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முன்பு முன்னேற்பாடு பணிகளை செய்ய வேண்டுமென ஊராட்சி நிர்வாகத்திற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top