Close
அக்டோபர் 10, 2026 6:38 மணி

தென்னிந்திய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள்: நாமக்கல்லில் துவங்கியது

நாமக்கல்லில் தென்னிந்திய அளவிலான வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் துவங்கியது. செவன் ஸ்டார் ஆர்ச்சரி கிளப் சாபில், தென்னிந்திய அளவிலான ஓபன் இண்டோர் வில்வித்தை போட்டிகள் நாமக்கல் நவோயா அகாடமி பள்ளியில் 2 நாட்கள் நடைபெறுகிறது.

இன்று நடைபெற்ற துவக்க விழாவில் பள்ளி பொருளாளர் தேனருவி கலந்துகொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். இந்தியன், ரீக்கோ, காம்பவுண்ட் மற்றும் போர்போ வில்கள் மூலம் போட்டிகள் நடைபெறுகின்றன. 12, 15 வயது ம்ற்றும் ஓபன் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது.

தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கான மாநிலங்களில் இருந்து சுமார் 160க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் வில்வித்தை வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு மெடல்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

நாளை 11ம் தேதி இறுதிப்போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெறும். முதல் 3 இடங்களைப் பெறும் வீரர்கள் வருகிற டிச. 10 முதல் 13ம் தேதி வரை மலேசியாவில் நடைபெறும் சர்வதேச இண்டோர் சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.

போட்டிக்கான ஏற்பாடுகளை தேசிய வில்வித்தை கழக பொது செயலாளர் கேசவன், பொருளாளர் ரமேஷ், தமிழ்நாடு வில்வித்தை கழக தலைவர் சீனிவாசன், தேசிய இண்டோர் வில்வித்தை கழக இணை செயலளர் சுப்ரமணி, செயற்குழு உறுப்பினர் நந்தகுமார் ஆகியோர் செய்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top