வரும், 23ம் தேதி நாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. பணி நாடுனர்கள் பங்கேற்று பயன்பெறலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தனியார்துறை நிறுவனங்களும்,- தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும், நேரடியாக சந்திக்கும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில், மாதந்தோறும் 3வது வெள்ளிக்கிழமை நடக்கிறது.
இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வரும், 23ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கிறது. தனியார் துறை நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான நபர்களை, அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்துகொள்ளலாம்.
முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, மேனேஜர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், கேஷியர், டைப்பிஸ்ட், மெக்கானிக்க, சேல்ஸ் அசிஸ்ட்டென்டு போன்ற பணிகளுக்கு தேர்வு செய்யவுள்ளனர்.
தனியார் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




