Close
அக்டோபர் 27, 2026 3:10 மணி

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி மாவட்ட ஆட்சியர் 2024ம் ஆண்டு கனமழையின் போது தீபமலை மற்றும் வ.உ.சி நகர் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் .

மேலும் மலையடிவாரத்தில் வசிக்கு ம் மக்களை மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமராவதி முருகையன் நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் முகாம் அமைத்து தங்க வைக்கவும், அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வருவாய் துறை மற்றும் மாநகராட்சி துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து திருவண்ணாமலை மாநகராட்சியில் பழைய அரசு மருத்துவமனை அருகில் கனமழை காலங்களில் நீர் தேங்கும் இடங்களிலும், தேனிமலை பகுதியில் உள்ள அண்ணா நகர் சர்க்கார் சாலையில் ஆய்வு மேற்கொண்டு சாலையை சீரமைக்கவும், மழைநீர் தேங்காத வகையில் வடிகால் மூலமாக தண்ணீர் வெளியேறவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் மாநகராட்சி துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க்  அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர் செல்வம், மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியர் மோகன்ராமன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top