Close
அக்டோபர் 27, 2026 2:22 மணி

நாமக்கல்லில் மக்கள் குறைதீர் கூட்டம்: 509 கோரிக்கை மனுக்கள் அளிப்பு

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 509 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, 2025-26ம் கல்வியாண்டில், பொது தேர்வுகளில், தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 57 மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை மற்றும் பாராட்டு சான்று வழங்கப்பட்டது. முதல்வர் கோப்பைக்கான, மாநில அளவிலான கால்பந்து போட்டியில், மூன்றாம் இடமும், கபடி போட்டியில் முதலிடம் பெறுவதற்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் சதீஷ்குமாரி, கிருஷ்ணவேணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, மழையால் சுவர் இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட பருத்திப்பள்ளி சுந்தரம் என்பவருக்கு, ரெட் கிராஸ் மூலம், நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 3 பேருக்கு ரூ. 34,785 மதிப்பில், காதொலி கருவி, மடக்கு சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். டி.ஆர்.ஓ., சரவணன், ஆர்.டி.ஓ., லெனின், சப் கலெக்டர் கற்பகம் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top