நாமக்கல் மாவட்டம் சிலுவம்பட்டி அங்கன்வாடி மையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், தேசிய அளவில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியர் மதுபாலன் துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: 6 மாதம் முதல் 5 வயது வரையான குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் வருகிற 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. வைட்டமின் ஏ கண் பார்வைக்கு தேவைப்படும் முக்கிய உயிர்சத்து ஆகும்.
இது உடல் உறுப்புகள் செயல்பாட்டிற்கு உதவுகிறது. தினமும் வைட்டமின் ஏ அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மீன், முட்டை, இறைச்சி, மஞ்சள் நிற காய்கறிகள், பழங்கள், கீரைகள் வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள ஆகும். இந்த குறைபாட்டால், பார்வை குறைபாடு பிரச்சினைகளை போக்க ஆண்டுதோறும் 2 முறை வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் தமிழக நடத்தப்படுகிறது.
நமது மாவட்டத்தில் தற்போது 90 ஆயிரத்து 703 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது என்று கூறினார்.
இந்த முகாமில் மாவட்ட திட்ட அலுவலர் போர்ஷியா ரூபி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




