Close
நவம்பர் 26, 2026 5:34 மணி

நாமக்கல்லில் நவ.1ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: 14,199 பேர் பங்கேற்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வு

நாமக்கல்லில் நவ.1ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ போட்டித் தேர்வு நடைபெற உள்ளது. 50 மையங்களில் மொத்தம் 14,199 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இது குறித்து கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான குரூப் 2, 2ஏ போட்டித்தேர்வு, வருகிற நவ. 1ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறுகிறது.

நாமக்கல், ராசிபுரம், ப.வேலூர், திருச்செங்கோடு ஆகிய தாலுகாக்களில் 50 தேர்வு மையங்களில், மொத்தம் 14,199 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு கண்காணிப்பு பணியில், சப்கலெக்டர் நிலையில் 4 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வர்கள் தேர்வு கூடங்களுக்கு எளிதாக சென்று வர சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தேர்வு கூடங்களுக்குள் காலை 8 மணிக்கு சென்றுவிடவேண்டும். காலை 9.00 மணிக்கு பின்னர் எக்காரணம் கொண்டும் தேர்வு கூடத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தேர்வர்கள் சமீபத்திய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை எடுத்து வரவேண்டும், அனலாக் வாட்ச் மட்டும் அணிந்துசெல்லலாம். தேர்வாணையத்தால் தடைசெய்யப்பட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் எதனையும் மையங்களுக்கு எடுத்து செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top