இந்திய இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு சங்கம் சார்பில் கோவாவில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகள் நடை பெற்றன. இதில், சீனியர் பிரிவில் கட்டா போட்டியில் பங்கேற்ற விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த அபிமானி தனது திறமையை வெளிப் படுத்தி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தைக் கைப் பற்றினார்.
இதன் மூலம் வரும் 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாய்லாந்தில் நடை பெற உள்ள இந்தோதாய்லாந்து சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி என்ற சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க அபிமானி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தில் நடைபெற உள்ள போட்டியில் சிறப்பாக செயல்படுவதற்காக மாஸ்டர்கள் வெங்கடேசன், பாலமுருகன், செந்தூரன், நான்சி மற்றும் தனுஷ் ஆகியோர் அபிமானிக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்க உள்ளனர்.
சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அடுத்ததாக தாய்லாந்தில் நடைபெற உள்ள போட்டிக்கும் தேர்வாகி காரியாபட்டி மற்றும் விருதுநகர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ள அபிமானிக்கு கராத்தே பயிற்சியாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.




