Close
நவம்பர் 26, 2026 5:44 மணி

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாணவர்களுடன் அமைச்சர் பங்கேற்பு

மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி 100 மாணவர்கள் பங்கேற்ற, மனிதச் சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் துவக்கி வைத்து பங்கேற்றார்.

தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளைச் சீரமைத்தல், புதுப்பித்தல் மற்றும் அவற்றை முறையாகப் பராமரித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாநகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து, மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுமார் 100 மாணவர்கள் பங்கேற்ற மனிதச் சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி பார்க் ரோட்டில் நடைபெற்றது.

தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மனிதச்சங்கிலி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நாமக்கல் எம்எல்ஏ திலீப், மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மனிதச் சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் மழைநீர் சேகரிப்பின் அவசியம், நீர்நிலைகளைப் பாதுகாத்தல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் மற்றும் எதிர்கால நீர்வளப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் முறையாக ஏற்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளில் உள்ள அடைப்புகள், சேதங்கள் மற்றும் பராமரிப்புக் குறைபாடுகளைச் சரிசெய்து, அவை முழுமையான செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top