கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த, அனைத்துக்கட்சியினர் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன், பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என முதல்வருக்கு விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தீவிர முயற்சி செய்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிம் முடக்கப்படும்.
கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடிப்பதற்கு, தமிழக முதல்வர் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி தலைர்கள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அனைவரையும் புதுடெல்லி அழைத்துச் சென்று, தமிழ்நாட்டிற்கு உள்ள காவிரி உரிமையை நிலை நாட்டுவதற்காக, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, தமிழக விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்படைவது குறித்து அனைவரது சார்பிலும் வலியுறுத்த வேண்டும்.
இதன்மூலம், கர்நாடக அரசு மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அனைக்கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். பிரதமரை சந்திப்பதற்கு தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




