ரஷ்ய இலக்கியத்தில் மட்டுமல்ல உலக இலக்கியத்திலும் தவிர்க்க முடியாத பெயர் லியோ டால்ஸ்டாய்.
இந்தக் கருத்தியல் போராளியின் எழுத்துகள், காலம் கடந்து இன்றைய நாட்களில் கூட அனைவராலும் வாசிக்கப்பட்டு வருகின்றன. முன்னிலைப் படுத்தப்படுகின்றன.
இராணுவ கொடூரங்களை, ஆதிக்க அவமதிப்புகளை கட்டுரைகளாக எழுதிய அவரின் கரங்கள் பின் சிறுகதைகள், நாடகங்கள், சிறுவர்களுக்கான நீதிக்கதைகள் என்று உலக எழுத்துலகைப் புரட்டிப் புதுமை சேர்த்தது.
டால்ஸ்டாயின் குடும்ப வாழ்க்கை மிகுந்த துயர் மிக்கது. இறுதி நாட்களில் குடும்பத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டு, வீட்டை விட்டு வெளியேறினார்.
மகத்தான அந்த எழுத்தாளன் ரயிலில் பயணித்த போது உடல்நலம் பாதிக்கப்பட்டு, “அஸ்டபோவ்” ரயில் நிலையத்தில் அனாதையாக இறந்து போகின்றார். இறக்கும் போது அவருக்கு வயது 82.
ரஷ்யாவுக்கு சுற்றுலா செல்பவர்கள் இன்றும்கூட, அந்த ரயில் நிலையத்துக்கு தவறாமல் சென்று, எழுத்துலக இமயத்தின் நினைவைத் தாங்கிச் சுமந்து செல்கின்றார்கள்!
திருச்சியிலிருந்து சங்கர் 🎋

