Close
செப்டம்பர் 27, 2026 6:21 மணி

புரட்டாசி பௌர்ணமி கிரிவலம்: லட்சக்கணக்கில் திரண்ட பக்தர்கள்,ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

புரட்டாசி மாத பௌர்ணமியொட்டி பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு  அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதந்தோறும் பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.

நிகழாண்டுக்கான புரட்டாசி  மாதத்திற்கான பௌர்ணமி (வெள்ளிக்கிழமை) இரவு 11.05 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் 26-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 10.44 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் நிறைவடைகிறது .  இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில்  அறிவித்திருந்தது.

அதன்படி, வெள்ளிக்கிழமை காலை முதலே பக்தா்கள் கிரிவலம் வரத் தொடங்கினா். நேரம் செல்லச் செல்ல கிரிவல பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்து வந்திருந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கிரிவலம் சென்று, கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சந்நிதிகள், மகான் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமம், அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன் சந்நிதிகளில் வழிபட்டனா்.

கிரிவலப் பாதையில் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், தாகம் தீா்க்க பக்தா்களுக்கு நீா் மோா் வழங்கப்பட்டது.

அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க அருணாசலேஸ்வரா் உடனாகிய உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னா், பக்தா்கள் தரிசனம் செய்ய கோயில் உள்ளே அனுமதிக்கப்பட்டனா். தரிசனம் செய்து திருமஞ்சனம் கோபுரம் வழியாக பக்தா்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டனா். சுவாமி தரிசனம் செய்ய 6 மணி நேரத்துக்கும் மேலானதாக பக்தா்கள் தெரிவித்தனா்.

பக்தா்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சிறப்புப் பேருந்துகளும், தெற்கு ரயில்வே சாா்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பபட்டன. ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலத்தில் இருந்து கடந்த இரண்டு நாட்களாக சுமார் 1200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல் வேலூர்- திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதையொட்டி, நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ரயில் நிலையத்தில் அலைமோதிய வரலாறு காணாத கூட்டம்

பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஊர் திரும்பியதால், திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் வரலாறு காணாத அளவிற்குப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. வரும் ரயில்களில் ஏறுவதற்காகப் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு நின்ற காட்சிகளைக் காணமுடிந்தது. குறிப்பாக, சென்னை, காட்பாடி, வேலூர், விழுப்புரம் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் விரைவு மற்றும் பயணிகள் ரயில்களில் கூட்டம் அள்ளிக்கோட்டியது.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் காவல்துறையினரும் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். திடீரென ஏற்பட்ட இந்த எதிர்பாராத மக்கள் வெள்ளத்தால் திருவண்ணாமலை ரயில் நிலையம் முழுவதும் ஸ்தம்பித்துப் போனது குறிப்பிடத்தக்கது. விடுமுறை நாட்கள் மற்றும் பௌர்ணமி நாட்களில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top