Close
அக்டோபர் 1, 2026 8:24 மணி

குழந்தைகள் நலன் குறித்து திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பை துவக்கி வைத்த ஆட்சியர்

குழந்தைகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வெளியிட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாநகராட்சியிலுள்ள கலைஞர் பல்நோக்கு அரங்கத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் குழந்தைகள் நலன் குறித்து அங்கன்வாடி பணியாளர்கள், கிராம செவிலியர்கள் மற்றும் கிராம அளவிலான கூட்டமைப்பு (மகளிர் திட்டம்) பொறுப்பாளர்களுக்கு ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து சிறப்புரையாற்றியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் திறனைவளர்க்க அங்கன்வாடி பணியாளர்கள், கிராம செவிலியர்கள் மற்றும் கிராம அளவிலான கூட்டமைப்பு (மகளிர் திட்டம்) பொறுப்பாளர்களுக்கு ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்யப்படுவதினால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. மேலும் குழந்தை திருமணத்தினால் சிறு வயதில் பிரசவித்து அக்குழந்தையை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு வந்துவிடுகிறது என்பதால் அவர்களின் எதிர்கால கனவுகள், கல்வியை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

குழந்தை திருமணங்களை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து இப்பயிற்சிக்கு வந்துள்ள அனைவரும் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளின் திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்கள் பெற்றோரிடமும் குழந்தைகளின் உயர் கல்வி குறித்தும், அவர்களின் எதிர்காலத்தைமேம்படுத்துவது குறித்தும், உடல்நிலை மற்றும் மனநிலையைபேணி காக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் பெண்களின் முன்னேற்றத்திற்காக மகளிர் சுயஉதவி கடனுதவிகள் அரசின் மூலம் வழங்கப்படுகிறது. அதனை முறையாக உபயோகப்படுத்திக்கொண்டு பொருளாதாரத்தை மேம்படுத்திகொள்ள தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகம் மூலம் தொழிற் பயிற்சிகள் நடத்தப்படுகிறது.

அதன் மூலம் பயிற்சி அடைந்து குழுக்களாக ஒருகிணைந்து கடனுதவி பெற்று பொருள்தாரத்தை மேம்படுத்தி கொள்ள முடியும். மேலும் இப்பயிற்சி வகுப்பை பயன்படுத்திக்கொண்டு குழந்தைகளின் நலனை பேணி காக்க அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து பெண் குழந்தைகள் நலனை கருத்தில் கொள்ளும் வகையில் பெண் குழந்தைகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், திட்ட அலுவலர் (ஒருகிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்) அன்பரசி, குழந்தைகள் நலக்குழு தலைவர் முருகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top