108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான, நேரடி வேலை வாய்ப்பு முகாம் வரும் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, காலை 10 மணி முதல் 2 மணிவரை, நாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள பழைய கோர்ட் வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
ஓட்டுநர் பணிக்கான தகுதிகள்:
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஆண் பெண் இரு பாலரும் கலந்து கொள்ளலாம். உயரம் 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
லைட் டிரைவிங் லைசென்ஸ் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் லைசென்ஸ் பெற்று ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். தகுதியானவர்கள் கல்வி சான்றிதழ், டிரைவிங் லைசென்ஸ் அனுபவ சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரி பார்ப்பதற்காக கொண்டு வர வேண்டும். மாத சம்பளம் ரூ. 21,120 மொத்தமாக வழங்கப்படும்.
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண்பார்வை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வுகள் நடைபெறும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 10 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணி வழங்கப்படும்.
மருத்துவ உதவியாளர்களுக்கான தகுதிகள்:
பிஎஸ்சி நர்சிங். அல்லது ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல் டி (12 ஆம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைஃப் சயின்ஸ், பிஎஸ்சி ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, இவைகளில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு 19-க்கு குறையாமலும் 30க்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ. 21,320 மொத்தமாக வழங்கப்படும்.
தேர்வு முறை :
மருத்துவ நேர்முகம் உடற்கூறியில், முதலுதவி, அடிப்படை நர்சிங் பணி தொடர்பான தேர்வு, மற்றும் மனிதவளத்துறை நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். முகாமில் தேர்வு தேர்வு செய்யப்படுபவர்கள் 50 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




