Close
அக்டோபர் 6, 2026 9:56 மணி

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் வனவிலங்கு வார விழா – 2026

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி விலங்கியல் துறை மற்றும் தமிழ்நாடு வனத்துறை, தென்காசி மாவட்டம் இணைந்து வனவிலங்கு வார விழா – 2026 நிகழ்ச்சியை கல்லூரி கருத்தரங்க அரங்கில் சிறப்பாக நடத்தினர்.

இந்நிகழ்வில் விலங்கியல் துறை இணைப் பேராசிரியரும் துறைத் தலைவருமான முனைவர் . வசந்தி வரவேற்புரை வழங்கி, சிறப்பு விருந்தினர்கள், வனத்துறை அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளை வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் முனைவர் மகாலட்சுமி தலைமை உரையாற்றினார். நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் நெல்லைநாயகம் சிறப்பிக்கப்பட்டார்.

அகஸ்தியமலை சமூகப் பாதுகாப்பு மையம், மணிமுத்தாறு நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சி இணை மற்றும் ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் சிறப்பு வளவாளராகக் கலந்து கொண்டு, “பகிரப்படும் நிலப்பரப்புகள்: மனிதர்கள்–வனவிலங்குகள் இணைந்து வாழ்வதற்கான எதிர்காலம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

மனிதர்களின் செயல்பாடுகள் அதிகரித்து வருவதால் வனவிலங்குகளின் இயற்கை வாழிடங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, வனவிலங்குகளைப் பாதுகாப்பதுடன், அவற்றுடன் பாதுகாப்பாகவும் இணக்கமாகவும் வாழ்வதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், வனவிலங்கு வார விழாவின் ஒரு பகுதியாக மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வுகள் மூலம் மாணவர்களிடையே வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் விலங்கியல் துறை பேராசிரியர்கள், வனத்துறை அலுவலர்கள், மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறைத் தலைவர் முனைவர். வசந்தி தலைமையில், விலங்கியல் துறை மற்றும் வனத்துறை ஒருங்கிணைப்புக் குழுவினர் சிறப்பாக மேற்கொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக விலங்கியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் இசக்கியம்மாள் நன்றியுரை வழங்கினார்.

“வனவிலங்குகளைப் பாதுகாப்போம்; இயற்கையைப் பாதுகாப்போம்; நமது எதிர்காலத்தைப் பாதுகாப்போம்” என்ற விழிப்புணர்வு செய்தியுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top