Close
அக்டோபர் 10, 2026 6:38 மணி

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றி: உசிலம்பட்டியில் தவெகவினர் கொண்டாட்டம்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா இருவருமே மாபெரும் வெற்றியை பெற்றுள்ளனர்.

தவெக ஆட்சி அமைந்ததும் நடைபெற்ற முதல் இடைத்தேர்தலில் பெற்ற இந்த வெற்றியை தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தவெக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், உசிலம்பட்டி எம்எல்ஏவுமான விஜய், தலைமையிலான நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தமிழகத்தின் நிரந்தர முதல்வர் வாழ்க, தமிழக வெற்றிக் கழகம் வாழ்க என கோஷங்களையும் எழுப்பி இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top