Close
அக்டோபர் 14, 2026 11:02 மணி

மூலப்பொருட்கள் விலை உயர்வால் டயர் ரீட்ரெடிங் கட்டணம் உயர்வு: சங்க கூட்டத்தில் முடிவு

பெட்ரோலிய பொருட்கள், ரப்பர் மற்றும் மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால், டயர் ரீட்ரேடிங் கட்டணம் 10 சதவீதம் வரை உயர்த்தப்படும் என டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்ட டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சங்க மாநில செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்: பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம், மின்சார கட்டண உயர்வு, டயர் ரீட்ரேடிங் தொழிலுக்கான மூலப் பொருட்களான ரப்பர் மற்றும் பெட்ரோலியம் பொருட்களின் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் டயர் ரீட்ரேடிங் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் டயர் ரீட்ரெடிங் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் விலை உயர்த்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மத்திய அரசு ரப்பர் மற்றும் பெட்ரோலிய மூலப் பொருட்களின் தட்டுப்பாட்டிற்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top