Close
அக்டோபர் 15, 2026 6:45 மணி

ஆம்னி பேருந்து கட்டணம் பண்டிகைக் காலங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணத்திற்கு மிகாமல் வசூலிக்க முடிவு

தமிழ்நாடு

சங்கத்தலைவர் அன்பழகன்

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மற்றும் கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகளை இயக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை செயலாளர், போக்குவரத்து ஆணையர், காவல்துறை உயர் அதிகாரிகள், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிர்வாகத்தினர் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன:

28.10.2023 அன்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணத்திற்கு மிகாமல், பண்டிகைக் காலங்களிலும் பயணச்சீட்டுக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலும், பயணிகள் பாதிக்கப்படாமலும், சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து பேருந்துகளை இயக்க வேண்டும்.

மேற்கண்ட முடிவுகளுக்கு அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு எங்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

பயணிகள், சங்கங்களால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டண விவரங்களை https://aoboa.co.in/BusFare என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். அந்தக் கட்டணத்திற்கு மிகாமல் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கட்டணம் உள்ளிட்ட ஆம்னி பேருந்துகள் தொடர்பான புகார்களுக்கு:
தொலைபேசி: 9043379664
மின்னஞ்சல்: allomnibusowners@gmail.com

அ. அன்பழகன்
தலைவர், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
தொலைபேசி: 9444039661

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top