மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வட்ட சட்ட பணி குழு சார்பாக சமரசத் தீர்வு மையம் அலங்காநல்லூரில் அமைக்கப்ப பட்டுள்ளது.
இந்த மையத்தை வட்ட சட்ட பணி குழு தலைவர் மாவட்ட உரிமையியல் நீதிபதி ராம கிஷோர் தலைமை தாங்கி திறந்து வைத்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
இந்த மையத்தில் பொதுமக்கள் குடும்பத் தகராறு, அக்கம்பக்கத்தில் ஏற்படும் தகராறு, சொத்து தகராறுபணிபுரியும் இடத்தில் ஏற்படும் தகராறு, சமூக பொது வள தகராறு, சமூக மற்றும் கலாச்சார தகராறு, பணம் மீட்டெடுப்பு தகராறு உள்ளிட்ட பிரச்சினைகள் சம்பந்தமாக நீதிமன்றம் செல்லாமல் விரைவாகவும் சுமூகமாகவும் தீர்வு காண்பதற்கு இந்த மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்என்று தெரிவித்தார்.
பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் முத்துமணி வரவேற்றார். இதில் வழக்கறிஞர்கள் செல்வகுமார், அழகேசன், முன்னாள் அரசு வழக்கறிஞர் பார்த்தசாரதி. ராமகிருஷ்ணன். சீனிவாசன். சுமிதா,பழனி குமார்,ஆறுமுகம், தன்னார்வலர்கள் தமிழ் முருகன், கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.




