Close
அக்டோபர் 27, 2026 3:08 மணி

திருக்கார்த்திகை தீபம் திருவிழா: பத்திரிக்கைக்கு சிறப்பு பூஜை

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. காவல் தெய்வமானதுர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவம்பர் 12-ம் தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெறும். இவ்விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலம் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நவம்பர் மாதம் 24-ந்தேதி தேதி பரணி தீபமும், மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா பூர்வாங்க பணிகள் மேற்கொள்ள   17ம் தேதி காலை பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. பந்தக்கால் முகூர்த்தத்தை தொடர்ந்து, கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தில் வலம் வரும் வாகனங்கள் சீரமைத்தல், திருக்கோயில் பிரகாரங்கள் சீரமைப்பு பணி உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது.

பத்திரிக்கைக்கு சிறப்பு பூஜை

இந்த தீபத் திருவிழா ஒட்டி பல்வேறு முன்னேற்பாடு பணிகளைமாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் மற்றும் கட்டளைதாரர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படக்கூடிய திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் திருவிழாக்களின் விவரம் அடங்கிய பத்திரிகை அச்சடிக்கப்பட்டு அண்ணாமலையார் கோவிலில் சம்பந்த விநாயகர் சன்னதியில் வைக்கப்பட்டு பத்திரிக்கைக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றது .

அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் பூஜை செய்த பத்திரிக்கையை கோவில் ஆணையர் பரணிதரனிடம் வழங்கினர். இதனைத் தொடர்ந்து தீபத் திருவிழா பத்திரிக்கை நாளை முதல் முக்கிய பிரமுகர்கள் பக்தர்கள் என அனைவருக்கும் தபால் மூலமாகவும் நேரடியாகவும் கோவில் ஊழியர்கள் மூலமாக வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் கோவில் சிவாச்சாரியார்கள், திருக்கோயில் பிச்சகர்கள் ரகுராமன் மற்றும் விஜயகுமார், முக்கிய பிரமுகர்கள் கோவில் ஊழியர்கள், பக்தர்கள்  என கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top