Close
நவம்பர் 26, 2026 5:43 மணி

தமிழ் பிராமியில், 41 இலக்கியங்களை எழுதி உலக சாதனை: ஆசிரியர்களுக்கு சான்றிதழ்

புவி சாட்டிலைட் மூலம், காலநிலை ஆய்வு மற்றும் தமிழ் பிராமியில், 41 செவ்விலக்கியங்களை எழுதி உலக சாதனை படைத்த ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் புத்தகங்கள் வெளியீட்டு விழா, நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடந்தது.

ஆசிரியர் கிருஷ்ணவேணி வரவேற்றார். சேலம், ஸ்டெம் வல்லுனர் அருளானந்தம், ஆசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்து பேசியதாவது:

கலாம் கலம் மற்றும் விக்ரம் புவிசாட் போன்ற குறைந்த விலையிலான சாட்டிலைட்களை கொண்டு, காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, 78 ஆசிரியர்கள், 5 நாட்கள் வெவ்வேறு இடங்கள் மற்றும் சூழல்களில், 360 ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், 80 ஆசிரியர்கள், 41 தமிழ் செவ்விலக்கியங்களை, தமிழ்-பிராமியில் எழுதியுள்ளது, ஓர் அரிய செயல். நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், தமிழி பூங்கா அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூறினார்.

தொடர்ந்து, நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஹேமலதா உருவாக்கிய ‘தமிழி 2.0’ என்ற புத்தகத்தை, ராசிபுரம் ரோட்ராக்ட் சங்க தலைவர் வெங்கடாஜலபதி வெளியிட்டார். மேலும், நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சிவபெருமான் உருவாக்கிய ‘தமிழ் பழகு’ என்ற புத்தகத்தை வெங்கடேஷ்வர குப்தா, தாட்சாயினி ஆகியோர் வெளியிட்டனர்.

ராசிபுரம் தொழிலதிபர் கருணைக்குமார், ரோட்டரி துணை கவர்னர் பன்னீர்செல்வம், ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் சதாசிவம் ஆகியோர், 158 ஆசிரியர்களுக்கு, புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் வழங்கிய, உலக சாதனை சான்றிதழை வழங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top