தமிழ்நாட்டின் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள ‘Roamie’ (www.roamie.co.in) புதிய பேருந்து டிக்கெட் முன்பதிவு இணையதளம் மற்றும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கமிஷன் செலவைக் குறைத்து, பயணிகளுக்கு நியாயமான கட்டணத்தில் வெளிப்படையான சேவையை வழங்குவதே இந்தத் தளத்தின் முக்கிய நோக்கமாகும்.
ONDC உடன் இணைப்பு: நகரங்களுக்கு இடையிலான பேருந்துப் பயணங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தளம், மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் முன்னெடுப்பான ONDC (Open Network for Digital Commerce) திறந்த டிஜிட்டல் வர்த்தக வலையமைப்புடன் இணைந்து செயல்படுகிறது. இதன் மூலம், ONDC வலையமைப்புடன் இணைந்துள்ள பல்வேறு செயலிகள் மூலமாகவும் பயணிகள் பேருந்துச் சேவைகளைக் கண்டறிந்து முன்பதிவு செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
அறிமுகக் கட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள்:
Roamie நிர்வாகம் தெரிவித்துள்ளபடி, தொடக்கக் கட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பேருந்து உரிமையாளர்கள், 1,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டின் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் மூலம் மேலும் பல உரிமையாளர்களை இணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பயணிகள் www.roamie.co.in இணையதளம் மூலமாகவும், Google Play Store மற்றும் Apple App Store-ல் ‘Roamie’ செயலி மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.
பயணிகளுக்கான சிறப்பம்சங்கள்:
-
பல்வேறு பேருந்து நிறுவனங்களின் சேவைகளை ஒரே இடத்தில் தேடி, புறப்படும் நேரம், கட்டணம் மற்றும் இருக்கை வசதிகளை ஒப்பிட்டுத் தேர்வு செய்யலாம்.
-
முன்பதிவை உறுதி செய்வதற்கு முன்பே செலுத்த வேண்டிய முழுக் கட்டணத்தையும் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
-
நேரடி கண்காணிப்பு வசதியுள்ள பேருந்துகளின் இருப்பிடத்தைப் பயணத்தின்போது அறிந்துகொள்ளும் வசதி மற்றும் பிராந்திய, சிறிய பேருந்து நிறுவனங்களின் சேவைகளையும் எளிதாகக் கண்டறியலாம்.
பேருந்து உரிமையாளர்களுக்கான பயன்கள்:
இணையவழி டிக்கெட் விற்பனைத் தளங்களுக்குச் செலுத்தப்படும் அதிகப்படியான கமிஷன் செலவைக் குறைத்து, ஒவ்வொரு டிக்கெட்டிலும் உரிமையாளர்களுக்குக் கிடைக்கும் வருவாயை மேம்படுத்த இந்தத் தளம் உதவுகிறது. வழித்தடங்கள், புறப்படும் நேரங்கள், இருக்கை இருப்பு மற்றும் முன்பதிவுகளை ஒரே நிர்வாகத் தளத்தில் கையாளும் வசதியையும் இது வழங்குகிறது.
நிர்வாகிகளின் பங்கேற்பு: இந்த அறிமுக விழாவில் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் மற்றும் ஆப்பேரட்டர் சங்கம் மற்றும் கோயம்புத்தூர் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் ஆகிய அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் இயக்கப்படும் ஆயிரக்கணக்கான ஆம்னி பேருந்துகள் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையில் முக்கியப் பங்காற்றுவதுடன், அரசிற்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வருவாயை ஈட்டித் தருவதில் முக்கியப் பங்களிப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புக்கு:
-
இணையதளம்: www.roamie.co.in
-
மின்னஞ்சல்: shankar@roamie.co.in
-
தொலைபேசி: +91 96209 62999




