Close
நவம்பர் 26, 2026 5:25 மணி

பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதர் 67வது நினைவு தினம் அனுசரிப்பு

நாமக்கல்லில் பழம்பெரும் சினிமா நடிகர் தியாகராஜபாகவதர் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்த தியாகராஜ பாகவதர், 1910ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி பிறந்தார். அவர் நடித்த ஹரிதாஸ் திரைப்படம், தொடர்ந்து 3 தீபாவளிகளைக் கடந்து ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

அவர் தனது 49ம் வயதில், 1959ம் ஆண்டு நவ.1ம் தேதி இறந்தார். தியாகராஜ பாகவதரின் 67-வது நினைவு தினம், எம்.கே. தியாகராஜ பாகவதர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. சங்கத்தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்து, தியாகராஜ பாகவதரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் ஜோதிடர் பாலமுருகன், குமுதம் நாகராஜன், நடராஜன், தியாகராஜன், குணசேகரன், சுப்பிரமணியம், வக்கீல் மனோகரன், சபரி, சுரேஷ் ஷர்மா, மாது, ஞானசேகரன், பிரகாஷ், தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top