Close
நவம்பர் 26, 2026 5:44 மணி

திருவண்ணாமலையில் உயா்நீதிமன்ற உத்தரவுபடி ஓய்வுபெற்ற நீதிபதிஆய்வு

உயா்நீதிமன்ற உத்தரவுபடி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் எதிரிலுள்ள அம்மணி அம்மன் மடத்தை ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன், ஓய்வு பெற்ற இணை ஆணையா் ஜெயராமன், ஆகாஷ் முத்துகிருஷ்ணன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. காவல் தெய்வமானதுர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவம்பர் 12-ம் தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெறும். இவ்விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலம் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நவம்பர் மாதம் 24ம் தேதி தேதி பரணி தீபமும், மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் கணித்திருக்கக்கூடிய நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வருகின்ற ஆன்மீக பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய பஞ்சாப் – ஹரியானா ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கண்ணன் தலைமையில் உயர்மட்டக் கண்காணிப்புக் குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றி சுவாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் வரவும் தேவையான காத்திருப்புப் பந்தல்கள், தங்கும் கூடங்கள், பொருட்கள் வைக்கும் அறை கழிவறை வசதிகள், குடிநீர் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை விரைவாகவும் தடையின்றியும் மேற்கொள்ளவும் மேலும் விழாவிற்கு தடையின்றி பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக, திருவண்ணாமலையில் உள்ள அம்மணி அம்மாள் மடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

25 ஆயிரம் சதுர அடி நிலத்தில் பக்தா்களுக்கான வளாகம் கட்ட வேண்டும். இந்த கட்டுமானத்தை 2027 மாா்ச் இறுதிக்குள் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதால், அம்மணி அம்மன் மடம் சுமாா் 24ஆயிரம் சதுர அடியில் உள்ளதால், இந்த பகுதியில் எதிா்காலத்தில் பக்தா்கள் தங்கும்

வளாகம் கட்டி, அதற்கு அம்மணி அம்மன் பெயா் சூட்ட வேண்டும் என்றும் நிரந்தர கட்டடம் கட்டும் வரை, அந்த நிலத்தில் தீப விழாவுக்கு வரும் பக்தா்கள் வசதிக்காக காத்திருப்புக் கூடம், உணவுக் கூடம், பொருள்கள் வைக்கும் அறைகள், கழிப்பறைகள் ஆகியவற்றை தற்காலிகமாக ஏற்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆய்வு

நீதிமன்ற உத்தரவுப்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் திருக்கோயில் அம்மணி அம்மன் கோபுரம் எதிரே உள்ள அம்மணி அம்மன் மடத்தை ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன், ஓய்வு பெற்ற இணை ஆணையா் ஜெயராமன் மேலும் இக்குழுவில் இடம்பெற்றுள்ள தனியாா் ஹோட்டல் உரிமையாளா் ஆகாஷ் முத்துகிருஷ்ணன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா, கோயில் இணை ஆணையா் பரணிதரன் உள்ளிட்ட துறை சாா்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top