Close
நவம்பர் 26, 2026 5:34 மணி

மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் குரூப்4 தேர்வுக்கான மாதிரி தேர்வுகள்

டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள குரூப் 4 போட்டித் தேர்வுக்கான முழு பாடத்திட்டத்தையும் உள்ளடக்கிய மாதிரி தேர்வுகள், மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நேரடியாக 3ம் தேதி முதல் துவங்கப்பட்டுள்ளது.

இத்தேர்வு மண்டல அளவில் 7 மாவட்டங்களுக்கு பொதுவான மதிப்பீடு செய்யப்பட்டு தரவரிசைப்படுத்தப்படும். டிஎன்பிஎஸ்சி அசல் தேர்வினைப் போன்றே இந்த தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை தோறும் 10 பாடவாரியான தேர்வுகளும், 2 முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.

ஏற்கனவே, நாமக்கல் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற மாணவர்கள் 2025-2026ஆம் ஆண்டு வெளியான குரூப் 4 தேர்வில் 17 பேரும், குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வில் 15 பேரும், மெயின் தேர்வில் 2 பேரும், சீருடைப்பணியாளர் தேர்வில் 19 பேரும், பிஜி டிஆர்பி தேர்வில் 2 பேரும், கூட்டுறவுத்துறை தேர்வில் 23 பேரும், ஹெல்த் இன்ஸ்பெக்டர் தேர்வில்12 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

குரூப் 4 மாதிரித் தேர்வில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள், தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி மூலமோ, dicgcnklclass@gmail.com என்ற இமெயில் மூலமோ, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரில் தொடர்புகொண்டோ தங்களது சுயவிவரத்தினை உடனடியாக பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top