Close
நவம்பர் 26, 2026 5:34 மணி

செயற்கை நுண்ணறிவு செலவின அதிகரிப்பு: ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை வழங்கும் கூகுள்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தனது முதலீடுகளை தீவிரமாக அதிகரித்து வரும் கூகுள் நிறுவனம், செலவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 5 நாடுகளில் உள்ள தனது ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சி மற்றும் அதற்கான உள்கட்டமைப்புச் செலவுகளைச் சமாளிக்கவும், ஒட்டுமொத்த நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கவும் கூகுள் இந்த முடிவை எடுத்துள்ளது.

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய ஐந்து நாடுகளில் உள்ள சில ஊழியர்களுக்கு இந்த விருப்ப ஓய்வுத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கூகுளின் முக்கியப் பிரிவுகளான ‘கூகுள் கிளவுட்’ மற்றும் ‘டீப்மைண்ட்’ ஆகியவை இந்த விருப்ப ஓய்வுத் திட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏ.ஐ மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் துறைகளுக்கு நிறுவனம் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவது தெளிவாகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் விருப்ப ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு, அவர்கள் பணியாற்றிய ஒவ்வொரு சேவை ஆண்டுக்கும் ஒரு மாதச் சம்பளம் வீதம் அதிகபட்சமாக 12 மாதங்கள் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் கோடிக்கணக்கான டாலர்களை தொழில்நுட்ப நிறுவனங்கள் கொட்டி வருவதால், இதர பிரிவுகளில் பணியாளர் தேவைகளையும் செலவுகளையும் மீளாய்வு செய்யும் அழுத்தம் கூகுளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதேபோல், மைக்ரோசாப்ட் போன்ற பிற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் கடந்த காலங்களில் இதுபோன்ற விருப்ப ஓய்வுத் திட்டங்களை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top