Close
நவம்பர் 26, 2026 5:25 மணி

அலங்காநல்லூரில் அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டுக்கடையில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்டக்கிளை தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வட்டக்கிளை செயலாளர் வேல்மயில், வட்டக்கிளை இணை செயலாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் பானு துவக்க உரையாற்றினார். மாவட்ட தலைவர் பரமேஸ்வரன் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்க உரையாற்றினர்.

இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், காசில்லாத மருத்துவத்தை உறுதி செய்திட வலியுறுத்தியும், ஓய்வூதிய திருத்தச் சட்டம் 2025 திரும்ப பெறக்கோரியும், கூடுதல் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதைக்தொடர்ந்து மாநில செயலாளர் கிருஷ்ணன் நிறைவுறையாற்றினார். முன்னாள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top