Close
நவம்பர் 26, 2026 5:34 மணி

நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

மழை -கோப்பு படம்

நாமக்கல் மாவட்டத்தில், நாளை முதல் 4 நாட்கள் பரவலாக பரவலமாக மழை பெய்ய வாய்ப்புள்ளாதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள, வானிலை முன் அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த வாரம் லேசான மழை பதிவாகியுள்ளது. பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 91.4 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை 77 டிகிரியாகவும் நிலவியது.

நாளை நவ. 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை 4 நாட்கள், அதிகபட்ச பகல்நேர வெப்ப நிலை 84.2 டிகிரி முதல் 89.6 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை 69.8 முதல் 73.4 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்.

4 நாட்கள் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம் 70 முதல் 90 சதவீதம் வரை இருக்கும். காற்று வடகிழக்கு திசையில் இருந்து, மணிக்கு 8 முதல் 12 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மாவட்டத்தில் நாளை நவ. 8ம் தேதி 12 மி.மீ., 9ம் தேதி 28 மி.மீ., 10ம் தேதி 5 மி.மீ., 11ம் தேதி 5 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top