Close
நவம்பர் 26, 2026 5:35 மணி

தீபாவளி பண்டிகையையொட்டி அவசர உதவிக்கு தயார் நிலையில் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை

தீபாவளி பண்டிகையையொட்டி, அவசர உதவிக்காக 108 அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து, நாமக்கல் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், தமிழக அரசு, சுகாதாரத் திட்டத்தின் கீழ் செயல்படும், 27க்கு மேற்பட்ட 108 அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகின்றன. தீபாவளி கொண்டாட்டத்தின்போது ஏற்படும் அவசர நிலைகளுக்கு, உடனடி உதவி செய்வதற்காக, ஆம்புலன்ஸ் வாகனங்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அவசர தேவைக்கேற்ப, திடீர் நடவடிக்கை எடுக்கவும், ‘ஹாட்ஸ்பாட்’ சாலைகளின் தன்மைகளை கருத்தில் கொண்டு, ஆங்காங்கே ஆம்புலன்ஸ் வாகனங்கள் முன்னெச்சரிக்கை அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளன. சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்கள், டிரைவர்கள் இருவரும், அவசர உதவிக்கு தேவையான மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட உபகரனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மேலும், அனைத்து 108 அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்களிலும், தீயணைக்க பயன்படும் கருவிகளும் வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து பொதுமக்களும், தீபாவளியை பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை எப்போதும் உங்களுடன் இருக்கும் நண்பனாக, உங்கள் அவசர தேவைக்கு தயாராக இருக்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top