மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் கந்த சஷ்டி விழாவானது 10.11.2026.. செவ்வாய்க்கிழமை தொடங்கி, 15.11.2026 ஞாயிறு கந்த சஷ்டி திருவிழாவும், 16.11.2026 திங்கள்கிழமை திருக்கல்யாணம், அன்னப் பாவாடை அபிஷேகம் நடைபெறுகிறது.
மதுரை அருகே திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோயில், மதுரை திண்டுக்கல் ரோடு தண்டாயுதபாணி கோயில், தென்கரை மூலநாத சுவாமி கோயில், மதுரை சாத்தமங்கலம் ஆவின் பால விநாயகர் கோயிலில், தாசில்தார் நகர் சித்தி விநாயகர் கோயில், மதுரை யானைக்குழாய் முத்துமாரியம்மன் கோயிலில் தினசரி மாலை 6.30..மணிக்கு முருகனுக்கு அர்ச்சகர் சிறப்பு பூஜைகளை செய்வார்.
மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6.மணிக்கு பாலமுருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இம் மாதம் 15.ம் தேதி ஞாயிறு காலை 10.30…மணிக்கு கந்தசஷ்டி அபிஷேகம். மாலையில் சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை, தொழிலதிபர் எம். மணி, நிர்வாக அதிகாரி ராஜா, கணக்கர் சி. பூபதி மற்றும் ஆலயப்பணியாளர்கள் செய்து வருகின்றனர்.




