திருவண்ணாமலை சமுத்திரம் ஏரியில் குளிக்கச் சென்ற அரசு காப்பக மாணவிகள் 4 பேர் மற்றும் விடுதி பாதுகாவலர் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆணாய் பிறந்தான் கிராமத்தில் அரசு காப்பகத்தில் தங்கிப் படித்து வரும் 4 மாணவிகள் மற்றும் விடுதி பாதுகாவலர் உள்பட 5 பேரும் தீபாவளி விடுமுறையையொட்டி அங்குள்ள சமுத்திரம் ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி 5 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




