Close
நவம்பர் 26, 2026 5:44 மணி

செங்கோட்டை குண்டுவெடிப்பு நடந்து ஓராண்டு: பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அதிர்ச்சி நினைவுகள்

டில்லி செங்கோட்டைக்கு வெளியே கடந்த 2025ம் ஆண்டு நவ 10ம் தேதி நிகழ்ந்த பயங்கர கார் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அந்த கொடூரச் சம்பவத்தின் வடுக்களும் அதிர்ச்சியும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், தப்பிப்பிழைத்தவர்கள் மற்றும் உள்ளூர் வியாபாரிகளின் மனதிலிருந்து இன்னும் அகலவில்லை.

சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், செங்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பில் தங்களது அன்பிற்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கும், காயமடைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்தத் துயரம் தினசரி போராட்டமாகவே மாறியுள்ளது:

கவுரி சங்கர் கோவிலுக்கு வழிபட வந்த அன்குர் என்ற இளைஞர் குண்டுவெடிப்பில் படுகாயமடைந்தார். தப்போது அவரால் பார்க்கவோ கேட்கவோ முடியாது என்று அவரது தந்தை வேதனையுடன் தெரிவிக்கிறார்.

செங்கோட்டைக்கு அருகில் உள்ள பழைய லஜ்பத் ராய் சந்தையில் வியாபாரம் செய்யும் வணிகர்கள் அன்றைய நாளின் பயங்கரத்தை நினைவுகூர்ந்தனர்.

அந்த நாளை நினைக்கும்போதே உடம்பு நடுங்குகிறது. வெடிப்பு நிகழ்ந்த கணத்தில் மெட்ரோ நிலையத்தின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன, வெடிசத்தம் கேட்டதும் மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அலறியடித்து ஓடினர். அந்த பகுதி முழுதும் ஒரே புகையாக மாறியது. தற்போது அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு மக்களும் அதிக விழிப்புடன் உள்ளனர். இன்றைக்கும் அந்த நினைவுகள் மனதிற்குள் நடுக்கத்தை ஏற்படுத்துகின்றன என கூறினர்

வழக்கு விசாரணைகளும் சட்ட நடவடிக்கைகளும் ஒருபுறம் தொடர்ந்தாலும், குண்டுவெடிப்பில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்கள் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், நிதி ரீதியாகவும் இன்றும் பெரும் சவால்களைச் சந்தித்து வருகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top