Close
நவம்பர் 26, 2026 5:26 மணி

நைனாமலை பெருமாள் கோயில் மலைப்பாதையில் மண் சரிவு: சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலைப்பாதையில் மண் சரிவால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இதனை விரைந்து சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை அருகே நைனாமலை அமைந்துள்ளது. 2,600 அடி உயரம் கொண்ட இம்மலையின் உச்சியில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல மொத்தம் 3,360 குறுகிய படிகளை கடந்து சென்றால், நின்ற நிலையிலுள்ள குவலயவல்லி தாயார் சமேத வரதராஜ பெருமாளை தரிசிக்கலாம்.

பல்வேறு சிறப்பு மிக்க நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் விஷேச தினங்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

இந்த கோயிலுக்கு பக்தர்கள் எளிதாக சென்றுவர மலைப்பாதை அமைக்கப்பட வேண்டும் என பக்தர்கள் பல ஆண்டுகளாக கேகிரிக்கை விடுத்து வந்தனர். ஏற்கனவே இருந்து திமுக ஆட்சியில், மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை 7 கி.மீ., தொலைவிற்கு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரூ.43 கோடி மதிப்பில் மலைப்பாதை அமைக்கப்பட்டது.

இந்த பாதை வழியாக வாகனங்களில் பக்தர்கள் கோயிலுக்கு சென்று வருகின்றனர். வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்து, பக்தர்கள் அனைவரும் சுமார் 300 மீட்டர் தூரம் நடந்துசெல்ல வேண்டிய நிலை உள்ளது. அந்த இடத்திற்கு படிக்கட்டுகள் அமைக்காமல் கரடு முரடாக உள்ளதால், முதியோர்களும், சிறுவர்களும் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே இந்த பகுதியில் அனைத்துவரும் எளிதாக சென்றுவரும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கவேண்டும் என ஏற்கனவே பக்தர்ள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தொடர் மழையால், புதிதாக அமைக்கப்பட்ட மலைப்பாதையில், பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் பெரிய பாறைகள் செங்குத்தாக தொங்கும் நிலையில் உள்ளது. இதனால் மலைப்பாதையில் செல்லும் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது.

இது குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து விரைவில் மலைப்பாதையை சீரமைத்து, பக்தர்கள் எளிதாக செல்லும் வகையில் படிக்கட்டுகளை அமைக்கவேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top