Close
நவம்பர் 26, 2026 5:44 மணி

கார்த்திகை தீபத் திருவிழா: காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் துவக்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவம்பர் 12-ம் தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெறும். இவ்விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலம் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நவம்பர் மாதம் 24-ந்தேதி தேதி பரணி தீபமும், மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடக்கிறது. தினமும் வெவ்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்பு 3 நாட்கள் உற்சவம் நடக்கும். அதன்படி முதல் நாள் உற்சவமான துர்க்கையம்மன் உற்சவம் நேற்று நடந்தது.

இதற்காக சின்னக்கடை தெருவில் உள்ள துர்க்கையம்மன் கோவிலில் நேற்று வியாழக்கிழமை இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது அதைத்தொடர்ந்து துர்க்கையம்மன் வீதி உலா நடந்தது. துர்க்கையம்மன் கோவிலில் இருந்து காமதேனு வாகனத்தில் புறப்பட்டு அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

இன்று ஸ்ரீபிடாரியம்மன் வழிபாடு:

அருணாசலேஸ்வரர் கோவில் 3 ஆம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறும்.

நாளை ஸ்ரீவிநாயகா் வழிபாடு:

காவல் தெய்வங்களின் 3-ஆவது நாள் வழிபாடு நவம்பர் 14-ம் தேதி இரவு அருணாசலேஸ்வரா் கோயில் ஸ்ரீசம்பந்த விநாயகா் சந்நிதியில் நடைபெறுகிறது. உற்சவா் ஸ்ரீவிநாயகா் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top