Close
நவம்பர் 26, 2026 5:34 மணி

தனியார் கல்வாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

திருச்செங்கோடு அருகே செயல்படும் தனியார் கல் குவாரியை மூடக்கோரி, பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

இது குறித்து கல் குவாரி எதிர்ப்பு போராட்டக்குழுவினர் கூறியதாவது: திருச்செங்கோடு தாலுகாவிற்கு உட்பட்ட அக்ரஹாரம் கிராமத்தில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்தக் குவாரிக்கு கடந்த மார்ச் மாதம் அனுமதி வழங்கப்பட்டது.

இதில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குவாரியைச் சுற்றி 300 மீட்டர் தொலைவுக்குள் வீடுகள், ஊர் நத்தம் பகுதிகள் மற்றும் கொட்டாம்பட்டி, அக்ரஹாரம், புதூர் ஆகிய 3 கிராமங்கள் அமைந்துள்ளன.

மேலும், 50 மீட்டர் தொலைவில் தார் சாலையும், 500 மீட்டர் தொலைவில் போர்வெல்லும் இருப்பது அதிகாரிகள் நடத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கல் குவாரியை மூட வேண்டும்.

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்டமாக பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top