Close
நவம்பர் 26, 2026 5:34 மணி

நாமக்கல் மாவட்டத்தில் 12 பயிர்களுக்கு பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் 12 பயிர்களுக்கு பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் காப்பீடு  பெறலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 2026-27 ஆம் ஆண்டுக்கான, பிரதமரின் பயிர் காப்பீடுத் திட்டத்தின் கீழ், சிறப்பு பருவத்திற்கு சம்பா நெல், சிறிய வெங்காயம், மற்றும் ரபி பருவத்திற்கு சோளம், மக்காசோளம், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, பருத்தி, கரும்பு, சிறிய வெங்காயம், வாழை, மரவள்ளி மற்றும் தக்காளி ஆகிய பயிர்களுக்கு, உரிய பிரிமியம் செலுத்தி காப்பீடு பெறலாம்.

நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 579.46, சிறிய வெங்காயம் ரூ. 2,109, சோளம் ரூ. 148.86, மக்கா சோளம் ரூ. 490.54, உளுந்து ரூ. 277.13, பாசிப்பயறு ரூ. 183.76, நிலக்கடலை ரூ. 334.93, பருத்தி ரூ. 435.35, கரும்பு ரூ. 1,567.96, வாழை ரூ. 1,911.78, மரவள்ளி ரூ. 601.06, தக்காளி ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 1,857.44 வீதம் பிரிமியம் செலுத்த வேண்டும்.

விவசாயிகள் பொது இ-சேவை மையங்கள் அல்லது தேசிய பயிர் காப்பீடு இணையதளத்தில்  விவசாயிகள் கார்னர் மூலமாகவும், கடன் பெறும் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவும் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பிரிமியம் செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top