நாமக்கல் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் 109வது பிறந்த நாள் விழா, நேரு பூங்காவில் நடைபெற்றது.
மாநகர காங்கிரஸ் தலைவர் ஸ்டாலின் சுப்ரமணியம் தலைமை வகித்தார். மாவட்ட அரசியல் விவகாரக்குழு உறுப்பினர்கள் சித்திக், டாக்டர் செழியன் ஆகியோர் இந்திராகாந்தியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மாவட்ட துணைத்தலைவர்கள் சாந்திமணி, ராணி பெரியசாமி, பொதுச்செயலாளர் செல்வராஜ், எருமப்பட்டி வட்டார காங்கிரஸ் தலைவர் தங்கராஜ், காங்கிரஸ் பிரமுகர்கள் கலைச்செல்வி, பாண்டியன், ராஜ் கோவிந்த், சத்யா, குமார், சரவணப்பிரபு, சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




