Close
நவம்பர் 26, 2026 5:26 மணி

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 21 ம் தேதி முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் மேற்கொள்ள வருகிற வரும் 21ம் தேதி முதல் மொத்தம் 3 நாட்கள், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழ்நாட்டில் 2027ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் கடந்த 12ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும், வரும் 21ம் தேதி சனிக்கிழமை, 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மற்றும் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

மேற்கண்ட நாட்களில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத 1.1.2027 அன்று அல்லது அதற்கு முன்பு 18 வயது பூர்த்தியடைந்த, தகுதியான வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை அந்தந்த வாக்குசாவடி மையங்களில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் பொதுமக்கள் அளிக்கலாம்.

எனவே, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளவர்கள் மற்றும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலமம். மேலும், தகுதியான வாக்காளர்கள் அனைவரும் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top