Close
நவம்பர் 26, 2026 5:34 மணி

எருமப்பட்டியில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம்

மாநில வேளாண்மை வணித்த்துறை இயக்குனர் உத்தரவின் பேரில், நாமக்கல் மாவட்ட வேளாண் வணிகத்துறை துணை இயக்குனரின் வழிகாட்டுதல் பேரில், நாமக்கல் உழவர் சந்தை சார்பில், அலங்காநத்தம் கிராமத்தில், விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சேகர் தலைமை வகித்து பேசினார். அப்போது, விவசாயிகள் உழவர் சந்தையில் புதிய அடையாள அட்டை பெற தேவையான ஆவணங்கள், உழவர் சந்தை நிர்வாகம் மற்றும் விலை நிர்ணயம் குறித்து கூறினார்.

உதவி வேளாண் அலுவலர் கோகுல் உழவர் சந்தையில் கடைகள் ஒதுக்கீடு குறித்து பேசினார். உதவி வேளாண் அலுவலர் ஸ்ரீதர், விவசாயிகளுக்கான இலவச பேருந்து வசதி, ஆங்கில காய்கறிகள் விலை நிர்ணம் குறித்த கூறினார்.

எருமப்பட்டி உதவி வேளாண் அலுவலர்கள் கார்த்திகேயன், அஷ்வின்குமார் ஆகியோர் விவசாயிகளுக்கான தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பேசினார்கள். முடிவில் விவசாயி கார்த்திக் நன்றி கூறினார். கூட்டத்தில் 26 விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top