நாமக்கல்லில் நடைபெற்ற 59வது தேசிய நூலக வார விழாவினை சிறப்பிக்கும் வகையில் 59 மரக்கன்றுகள் நடப்பட்டன.
நாமக்கல் மாவட்ட மைய நூலகம் மற்றும் மைய நூலக வாசகர் வட்டம் சார்பில், 59வது தேசிய நூலக வார விழாவையொட்டி, நாமக்கல் அருகே கீரம்பூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 59 மரக்கன்றுகள் நடவு செய்யும் விழா நடைபெற்றது.
மரக் கன்றுகள் நடும் விழாவில் நாமக்கல் முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் சந்திரசேகர் மாவட்ட நூலக அலுவலர் வேல்முருகன், முதல் நிலை நூலகர் சக்திவேல், இரண்டாம் நிலை நூலகர் சாந்தி, மூன்றாம் நிலை நூலகர் கோகிலா, மைய நூலக வாசகர் வட்ட தலைவர் தில்லை சிவக்குமார், தனியார் பள்ளி பொருளாளர் தேனருவி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மொத்தம் 59 இலுப்பை, புன்னை. அத்தி, பூவரசு, புங்கன் மரக் கன்றுகள் நடவு செய்தனர்.




