Close
நவம்பர் 26, 2026 5:34 மணி

நாமக்கல்லில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்: 59 பேர் தேர்வு

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற்ற, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 59 பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டது.

தனியார்துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல், மோகனூர் ரோட்டில் செயல்பட்டுவரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்றது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் 29 தனியார் நிறுவனங்களின் சார்பில் அதன் நிர்வாகிகள் கலந்துகொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்தனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பட்டதாரிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 107 பேர் பங்கேற்றனர். அதில் 59 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணிநியமன உத்தரவுகள் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top