Close
நவம்பர் 26, 2026 5:35 மணி

திருவண்ணாமலை தீப விழா: 1,000 குழந்தைகளுக்கு உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர்

உலகப்பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப விழா இந்த ஆண்டும் உற்சாகத்துடனும் பக்தியுடனும் நடைபெற்று வரும் நிலையில், 1,000 குழந்தைகளுக்கு விலையில்லா உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் டிடிகே ஹெல்த்கேர் நிறுவனத்தின் சார்பாக வழங்கப்பட்டது.

இன்று தீபத்திருநாள் சிகர நிகழ்வான தேர்த்திருவிழா நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு கரும்பு தொட்டில் எடுத்து நேர்த்திகடன் செலுத்துவார்கள்.

இந்நிலையில் டிடிகே ஹெல்த்கேர் நிறுவனத்தின் சார்பாக ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்படும் இந்த உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் பாட்டில்கள், திருவண்ணாமலை ராஜ கோபுரம் அருகே வழங்கப்பட்டன.

இதில் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் வள்ளியப்பன் மற்றும் விற்பனை அதிகாரி பெருமாள் மற்றும் சீனிவாசன், பசுபதி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top