Close
நவம்பர் 26, 2026 5:34 மணி

நாமக்கல்லில் மளிகை கடையில் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல்

நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகில், தடை செய்யப்பட்ட 8 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த, கடை உரிமையாளருக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

நாமக்கல் மாநகராட்சி பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து, அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு, பறிமுதல் செய்வதுடன், அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாமக்கல் பழைய பேருந்து நிலையம் பகுதியில், இரவு நேரத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகலையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக, நாமக்கல் மாநகராட்சி ஆணையர் செல்வ பாலாஜிக்கு தகவல் வந்தது.

அவரது உத்தரவின் பேரில், துப்பரவு அலுவலர் திருமூர்த்தி தலைமையில், பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள டிகேசி தெருவில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ஒரு மளிகை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, 8 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. மேல் நடவடிக்கைக்காக, பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், உணவு பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடை உரிமையாளருக்கு, உணவு வழங்கல் பாதுகாப்புத்துறை மூலம் ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top