Close
நவம்பர் 26, 2026 5:35 மணி

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: தமிழக முதல்வருக்கு ஆசிரியர்கள் நன்றி

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர், நாமக்கல் ராமு.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு, ஆசிரியர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் நாமக்கல் ராமு, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வினைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் தாமதமில்லாமல், ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 60 சதவீதம் அகவிலைப்படியை, 3 சதவீதம் உயர்த்தி 63 சதவீதமாக வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அகவிலைப்படி உயர்வின் மூலம் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நேரடியாகப் பயன்பெற உள்ளனர். இதற்காக ஆண்டுக்கு சுமார் ரூ. 1,858 கோடி கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்திருப்பது, அரசு ஊழியர்களின் நலனில் தமிழக அரசு கொண்டுள்ள உண்மையான அக்கறையை வெளிப்படுத்துகிறது.

அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலனில் தமிழக முதல்வர் காட்டிவரும் அக்கறை மேலும் தொடரவும், அவர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top