திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒரு முக்கிய ஐதீக நிகழ்வுதான் \திருத்தேரை ஓட்டிய பிரம்ம தேவனுக்கு நன்றி தெரிவித்த சந்திரசேகரர் வைபவம். நடைபெற்றது.
பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள் பெற்றது திருவண்ணாமலை.
ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவம்பர் மாதம் 24ம் தேதி தேதி பரணி தீபமும், மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
திருவிழாவின் முக்கிய திருவிழாவான 7-ஆவது நாளான நேற்று காலை 7.00 மணிக்கு மேல் விநாயகா் தேரோட்டம் தொடங்கியது. முதல் தேரான விநாயகர் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆன்மீக பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் அண்ணாமலைக்கு ‘அரோகரா’ உண்ணாமலையம்மனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு தேரினை வடம் பிடித்து இழுத்து மாடவீதியில் வலம் வந்து, தெய்வானை சமேத முருக பெருமான் , அருணாசலேஸ்வரர் மகாதேரோட்டம், பெண்களால் இழுக்கப்படும் அம்மன் தேரோட்டமும், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து7-ஆவது நாளான இன்று குதிரை வாகனத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் எழுந்தருளியினர். அதனைத் தொடர்ந்து சந்திரசேகர் மற்றும் விநாயகர் மகாரதம் என்று அழைக்கப்படும் அண்ணாமலையார் திருத்தேரின் முன்பு எழுந்து அருளினர்.
தீபத் திருவிழாவின் 7ம் நாளான நேற்று மகா தேரோட்டம் நடைபெற்றது. அப்போது அண்ணாமலையாரின் தேரினை தேரோட்டியாக இருந்து தேரினை இயக்கி நிலைக்கு கொண்டு வந்த பிரம்மதேவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக திருத்தேருக்கு யாகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்று, அண்ணாமலையாரின் சொரூபமாக விளங்கும் சந்திரசேகர் பிரம்ம தேவனுக்கு நன்றி தெரிவித்தார்.
புராணங்களின்படி, சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தபோது பூமி தேராகவும், பிரம்ம தேவன் அந்தத் தேரை ஓட்டும் சாரதியாகவும் செயல்பட்டார். திருவண்ணாமலை தேரோட்டத்தின்போதும் அண்ணாமலையாரின் தேரைப் பிரம்ம தேவனே சாரதியாக இருந்து ஓட்டுவதாக ஐதீகம்.
திருவிழாவின் 7-ஆம் நாளன்று பஞ்சரதத் தேரோட்டம் நிறைவுற்று, தேர் நிலையை அடைந்த பிறகு, உற்சவரான சந்திரசேகரர் திருத்தேரைச் சுற்றி வந்து, தேரைச் சிறப்பாக ஓட்டிய சாரதியான பிரம்ம தேவனுக்கு நன்றி தெரிவித்து ஆசி வழங்கும் சடங்கு நடைபெறுகிறது.
ஆன்மீக முக்கியத்துவம்: இறைவனே தன் தேரை ஓட்டியவருக்கு நன்றி செலுத்துவது, எந்தவொரு பெரிய காரியத்திற்கும் துணை நிற்பவர்களைப் போற்ற வேண்டும் என்ற உயரிய தத்துவத்தை உணர்த்துகிறது.
இந்த நிகழ்வின்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அண்ணாமலையாருக்கு அரோகரா என்று முழக்கங்கள் எழுப்பினர் தொடர்ந்து குதிரை வாகனத்தில் சந்திரசேகர் மற்றும் விநாயகர் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.




