Close
நவம்பர் 26, 2026 5:34 மணி

சர் சிவி ராமனின் நினைவைப் போற்றுவோம்!

ஒளிக்கதிர்கள் ஃபோடான்களால் ஆனவை என்பதை நாம் அறிவோம். இக்கதிர்கள் ஒரு பொருளில் படும்போது போடான்களுக்கும், அப்பொருளின் மூலக்கூறுகளுக்கிடையே ஆற்றல் பரிமாற்றம் நிகழ்கிறது.

வெண்ணொளிக்கதிர்கள் வெவ்வேறு அலை நீளம் கொண்ட வண்ணக்கதிர்களின் கலப்பு என்பதும், இக்கதிர்களுக்கும் பொருளுக்கும் இடையே ஆற்றல் பரிமாற்றம், அலை நீளங்களுக்கற்ப வெவ்வேறு அளவில் நெகிழ்வற்று நிகழ்வதால், வண்ண கதிர்களின் சிதறல் உண்டாகிறது. இதனை தான், எங்கள் திருச்சி மண் தந்த நம் விஞ்ஞானி, சர். சி.வி. ராமன் கண்டுபிடித்தார், அது தான் ராமன் விளைவு.

நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் சி.வி. ராமன் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1917 இல் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்தியாவின் முதல் தேசிய பேராசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராமன் ஒளியியல் நிபுணர் மட்டுமல்ல, ஒலியியலிலும் பரிசோதனை செய்தார். இசையில் நாட்டம் கொண்டிருந்ததால் மிருதங்கம், தபேலா கருவிகளின் சுரங்களையும் அதிர்வலையின் கோட்பாடுகளை பற்றியும் கட்டுரை வெளியிட்டார்.

இந்திய மேளங்களின் ஒலியின் இணக்க இயல்பை முதலில் ஆராய்ந்தவர் ராமன் தான். தன் இறுதி காலம் வரை இசையினுள் புதைந்த இயற்பியல் தேடல் அவரிடம் நீண்டது.

திருச்சியிலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top