Close
நவம்பர் 26, 2026 7:56 மணி

குப்பையை தரம் பிரித்து வழங்காத கடைகளுக்கு அபராதம்: நாமக்கல் மாநகராட்சி அதிரடி

இந்தியா முழுவதும், கடந்த, ஏப். 1 முதல், திடக்கழிவு மேலாண் விதிகள் அமலுக்கு வந்துள்ளது. திடக்கழிவு மேலாண் திட்டத்தின் கீழ், வீடுகள் மற்றும் கடைகளில் உற்பத்தியாகும் குப்பையை, நான்கு வகைகளாக தரம் பிரித்து, தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

தினமும், 100 கிலோ அளவிற்கு குப்பையை உற்பத்தி செய்யும் வணிக நிறுவனங்கள், மொத்த கழிவு உற்பத்தியாளரான பல்க் வேஸ்ட் ஜெனரேட்டரின் கீழ் வருவதால், தத்தம் ஈரக்கழிவுகளை தாமே மேலாண்மை செய்யவும், உலர் கழிவுகளை முறையாக தரம் பிரித்து மாநகராட்சியிடம் ஒப்படைக்கவேண்டும், தவறினால் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கடந்த, அக். 1ல், நாமக்கல் மாநகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நாமக்கல் மாநகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் நந்தினி தலைமையில், குப்பையை தரம் பிரித்து வழங்காத, சேலம் ரோட்டில் சாலையில் உள்ள பேக்கரிகள் மற்றம் ஹோட்டல்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, குப்பைதய தரம் பிரித்து வழங்காத, 4 ஹோட்டல்கள் மற்றும் பேக்கரி கடைகளுக்கு தலா ரூ. 5,000 வீதம் மொத்தம் ரூ. 20,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top